சு.செல்வக்குமார்.வணக்கம்! அக்.19-021
வட்டார இலக்கியங்கள் வரிசையில் கொங்கு வட்டாரப்புதினங்களுக்குத் தனித்த இடமுண்டு. கொங்கு வட்டாரப்புதினங்களுக்கு ”முன்னத்தி ஏர்” ஆக விளங்குபவர் ஆர். சண்முகசுந்தரம். இவரைத் தொடர்ந்து பல புதின எழுத்தாளர்கள் பல புதினங்களை எழுதி வந்துள்ளார்கள். வாசகர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பயன்படும் வகையில் கொங்குப்புதினங்கள் ஆசிரியர்கள், கொங்குப்புதினங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்த தரவுகள் இப்பகுதியில் இடம்பெறுகின்றன.
ஆர்.சண்முக சுந்தரம்- நாகம்மாள் (முதல் வட்டாரப்புதினம் (1942), அறுவடை, கனாச்சுனை, சட்டிசுட்டது, தனிவழி, பனித்துளி, பூவும்பிஞ்சும்.
பண்ணன் -
கு. சின்னப்பபாரதி - சங்கம்,சர்க்கரை, தாகம், பவளாயி, சுரங்கம்
இரா.வடிவேலன் -தொட்டிக்கட்டு வீடு
பெருமாள் முருகன்- ஏறுவெயில், கூளமாதாரி, மாதொருபாகன்
சி.ஆர். இரவீந்திரன்- பழைய வானத்தின் கீழே. அங்குத்தாய், ஈரம்கசிந்த நிலம். காக்கைப்பொன், வெயில் மழை, காலம்,மஞ்சுவெளி, ஓடைப்புல்,காற்றே கனலே, செந்தூரச்சாரல். தேயிலைக் கொழுந்து, மணியபேரா, கண்ணில் மின்னல், இரும்புச்சுவர்கள்
சூர்ய காந்தன்- மானாவாரி மனிதர்கள், அம்மன் பூவோடு, பூர்வீக பூமி, எதிரெதிர் கோணங்கள். கிழக்குவானம், விதைச்சோளம். கல்வாழை, ஒருவயல் வெளியின்கதை, அழியாச்சுவடு, முள் மலர் வேலி,பிரதி பிம்பங்கள்
மா.நடராசன்- ஒண்டிக்காரன் பண்ணையம். ஊர் கலைஞ்சு போச்சு. குன்னம். விசக்கடி. சாம்பல் மேடு.
பழமன்- நந்தியாவட்டம், தலைச்சுமை, ஒத்தப்பனை, கள்ளிக்கென்ன வேலி, மொட்டை(எ) மாணிக்கம்(குறும்புதினம்).
ப.க.பொன்னுசாமி -படுகளம், திருமூர்த்தி மண்(படுகளம்-2)
பட்சி - கல்லாங்காடு
ஆய்வுகள்- 1.முனைவர் இரா. இளவரசு ”கொங்கு வட்டாரப்புதினங்களில் மக்கள் வாழ்வியல்”
2. முனைவர் சு. செல்வக்குமார் ”கொங்குப்புதினங்களில் பண்பாட்டுப்பதிவுகள்”
தொடரும்...
Nice
பதிலளிநீக்கு