ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

கவிதைகள்

 இளவேனில்காலம்

மலர்ச்சி  ஆனது.....?

பூத்துக்குலுங்கும் வேம்புகள்!


எக்காலத்திலும்

உணவைச் சேகரிப்பதில்லை

பறவைகள்!

அவைகளையும்

அவைகளின் உணவுகளையும் 

உண்டபடி மனிதர்கள்!



வழிகாட்டுவது ஒன்றே

எங்கள் பணி!

இப்படிக்குக் கைகாட்டிமரங்கள்.



மழை நின்ற விடியலின் அழகும்

மலைவீழ் அருவியின் மாட்சியும்

செந்தமிழின் செழுமையும்

செங்கதிரோனின் சீர்மையும் 

செங்கரும்பின் இனிமையும்

கிளைக்கும் மஞ்சளென உறவுகளும்

வழி பிறக்கும் இம்முன்பனியில்

வந்திடும் பொங்கல் நாளில்

உங்கள் இல்லம் வந்திட

வாழ்த்துக்கள்!


எல்லோரும் நியாயத்தைத்தான்

பேசுகிறார்கள்

அவரவர்  நியாயத்தை நியாயமென...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கவிதைகள்

 இளவேனில்காலம் மலர்ச்சி  ஆனது.....? பூத்துக்குலுங்கும் வேம்புகள்! எக்காலத்திலும் உணவைச் சேகரிப்பதில்லை பறவைகள்! அவைகளையும் அவைகளின் உணவுகளைய...