இரண்டாயிரமாண்டுக்கு மேலான தமிழ் மரபின் தொடர்ச்சியாய் அடையாளமாய் மாலகோயில்!
காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தின் தெய்வம் மாயோன்!
கொங்குப்பகுதியில் மாட்டுப்பொங்கலன்று மாட்டுப்பட்டிகளில் 'ஆலகொண்ட மாலசாமிக்கு' (மாயவர்க்கு) ப் பொங்கலிடுவது மரபு. பொங்கலன்று பிறந்த மாட்டுக்கன்றினை அடுத்த ஆண்டு ஆல் கொண்ட மாலுக்கு நேர்த்திக்கடனாகச் செலுத்துவது வழக்கம். பட்டியில் பொங்கலிட்ட பிறகு தங்களுடைய மாட்டுப்பாலைக்கொண்டு சென்று ஆல்கொண்ட மாலுக்கு 'பட்டி பெருக பால் பானை பொங்க ' வேண்டி வழிபடும் வழிபாடும் தொடர்கிறது.
இவையெல்லாம் 'மாயோன் மேய காடுறை உலகம்' என்ற தொல்காப்பிய அடிகளை நினைவூட்டி தமிழரின இரண்டாயிரமாண்டு மரபை எடுத்துக்காட்டி அமைகின்றன.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக